அபாயம் அதிகரிக்கிறது, நாம் பாதுகாப்பை அதிகரிப்போம்

0
11871
cylcone nivar
cylcone nivar

கோவிட் பெருந்தொற்றுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இந்த நிவர் புயலின் தாக்கத்தை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனை உங்களை மிகவும் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது. இந்த சீதோஷ்ண நிலையில் நோய் தொற்று பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் இளம்சிறார்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், இதர உடல் நலமில்லாதவர்களை மிகக்கவனமாக பாதுகாக்க வேண்டும்.

பொதுவாக:

  • நம்பகம் மிகுந்த தரப்புகளில் இருந்து பெறப்படும் தகவல்களை மட்டும் உறுதி செய்த பிறகு பகிரவும்.
  • உங்கள் தகவல் தொடர்பு சாதனங்களின் பேட்டரிகளை முழுதும் சார்ஜ் செய்து கொள்ளவும்.
  • வீட்டுக்கு தேவையான அத்யாவசிய பொருட்களை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்கவும்.
  • வீட்டின் மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளை தற்காலிகமாக அணைத்து வைக்கவும்.

உடல் நலம்:

  • மருந்துகள், கிருமி நீக்கிகள், இதர அத்யாவசிய மருத்துவ பொருட்களை அருகில் உள்ள மருந்தகத்தில் இருந்து வாங்கி வைத்திருக்கவும்.
  • உங்கள் மருத்துவ தகவல் அறிக்கைகளையும், முதலுதவி பெட்டியையும் தயார் நிலையில் பாதுகாப்பாக இருக்கவும்.
  • எந்த விதமான உடல்நல குறைவிற்கும், மருத்துவ ஆலோசனைக்கும் அப்போலோ 24×7 செயலியை பயன்படுத்தவும்.

பாதுகாப்பான உணவு:

  • இளஞ்சூடான/ சூடான புதிய உணவுகளை மட்டுமே உட்கொள்ளவும்.
  • கொதிக்க வைத்த நீரை பருகவும்.
  • சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம்களை தவிர்க்கவும்

அவசர மருத்துவ சேவைக்கு
அழையுங்கள் 1066
24 மணிநேர நேரடி தொடர்பு