முகப்புஆரோக்கியம் A-Zசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இருந்து மீள்வதில் உணவு மற்றும் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. காயங்கள் முழுமையாக குணமடைய சரியான உணவுமுறை அவசியம். சிறுநீரக செயலிழப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் சில உணவு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கலாம், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு இந்த கட்டுப்பாடுகள் தேவைப்படாது, எனவே ஹீமோடையாலிசிஸ் உணவுடன் ஒப்பிடும்போது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான உணவுத் திட்டத்தை பின்பற்றுவது மிகவும் எளிதானது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் சரியான உணவுமுறையின் முக்கியத்துவம்

காயம் குணமடைய சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து மிகவும் முக்கியம். இது நிராகரிப்பு மற்றும் எந்தவொரு தொற்றுநோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஏற்ற சரியான உணவுத் திட்டத்தை உணவியல் நிபுணர் பரிந்துரைப்பார். சில சந்தர்ப்பங்களில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் தடைசெய்யப்பட்ட உணவுகளை நீங்கள் சாப்பிடலாம். நன்கு சமநிலையான உணவு பின்வரும் நன்மைகளைக் கொண்டிருக்கும்:

  • அதிக எடை அதிகரிப்பைத் தடுக்கிறது
  • இரத்த சர்க்கரை அளவை சாதாரண வரம்பிற்குள் வைத்திருக்கும்
  • இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது
  • இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருக்க உதவுகிறது
  • உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க போதுமான கால்சியம் இருக்கும்
  • இரத்த சோகையைத் தடுக்கும்

சிறுநீரக மாற்று சிகிச்சைக்குப் பிறகு எடுத்துக்கொள்ளக்கூடிய உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான  வழிகாட்டுதல்கள்

உங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் உடல்நிலையின் அடிப்படையில் உங்கள் உணவியல் நிபுணர் பொருத்தமான ஊட்டச்சத்து திட்டத்தை உருவாக்குவார். உங்கள் மருத்துவ அறிக்கைகள், எடை, சிறுநீரக செயல்பாடு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் ஆகியவை உணவுத் திட்டத்தை உருவாக்க பரிசீலிக்கப்படும். உங்கள் உடல்நிலை எவ்வாறு மேம்படுகிறது என்பதைப் பொறுத்து உணவுத் திட்டம் குறுகிய கால அல்லது நீண்ட காலமாக ஒன்றாக இருக்கலாம். வழிகாட்டுதல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • நீரேற்றத்துடன் இருங்கள்: நிறைய தண்ணீர் குடிக்கவும், ஒரு நாளைக்கு தோராயமாக 2 லிட்டர். நீங்கள் நன்கு நீரேற்றமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.
  • புரதம்: இழந்த எடை மற்றும் தசை வலிமையை மீண்டும் பெற, உங்கள் உணவியல் நிபுணர் எவ்வளவு புரத உட்கொள்ளல் அவசியம் என்று பரிந்துரைப்பார்.
  • பாஸ்பரஸ்: புதிய சிறுநீரகத்துடன், உங்கள் உடல் சிறுநீரக செயலிழப்பின் போது இழந்த எலும்பின் வலுவை மீண்டும் உருவாக்கத் தொடங்கும். இரத்தத்தில் பாஸ்பரஸ் அளவு குறைந்தால், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்ற பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவை உங்கள் உணவியல் நிபுணர் பரிந்துரைக்கலாம்.
  • பொட்டாசியம்: பெரும்பாலும் மாற்று மருந்துகள் பொட்டாசியத்தின் அளவை (அதிகரித்தோ அல்லது குறைக்கும்) பாதிக்கலாம், இது தசை மற்றும் இதய செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும். உங்கள் இரத்தத்தில் உள்ள பொட்டாசியம் அளவைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உணவு பரிந்துரைக்கப்படும்.
  • சோடியம் அல்லது உப்பு: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் உயர் இரத்த அழுத்தம் அல்லது திரவம் தக்கவைப்பை அனுபவிக்கலாம், அத்தகைய சந்தர்ப்பங்களில் குறைந்த உப்பு உணவு பரிந்துரைக்கப்படும். பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அளவைப் போலல்லாமல், சில மாதங்களில் கட்டுப்படுத்த முடியும், குறைந்த சோடியம் உணவு நீண்ட காலத்திற்கு பரிந்துரைக்கபப்டும்.
  • கொழுப்பு: ஆரோக்கியமான எடை மற்றும் ஆரோக்கியமான இதயத்திற்கு, உங்கள் உணவியல் நிபுணர் குறைந்த கொழுப்புள்ள உணவை பரிந்துரைப்பார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு தவிர்க்க வேண்டிய உணவு

உங்கள் சிறுநீரக ஆரோக்கியம், மருந்துகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில், மருந்துகளுடன் தொடர்புகொண்டு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அதிக ஆபத்துள்ள உணவைப் பற்றி உணவியல் நிபுணர் உங்களுக்கு விளக்குவார்.

  • மாதுளை மற்றும் திராட்சைப்பழம்: மாதுளை மற்றும் திராட்சைப்பழம் அல்லது சாறு நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளுடன் வலுவான எதிர்வினையை ஏற்படுத்தும், எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.
  • மூலிகைகள் தவிர்க்கவும்: நீங்கள் எந்தவொரு மூலிகைகள் அல்லது மூலிகை டீகளை எடுத்துக் கொள்ளக்கூடாது, ஏனெனில் அவை மாற்று சிகிச்சைக்கு பிந்தைய மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம் மற்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
  • பச்சையான அல்லது சமைக்கப்படாத உணவு: குறைவாக வேகவைத்த அல்லது பச்சை உணவு, பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக கடுமையான குடல் நோய்க்கு ஆபத்தை ஏற்படுத்தும், எனவே சமைக்கப்படாத இறைச்சி, கடல் உணவுகள் அல்லது கோழிப் பொருட்களை சாப்பிடுவது பரிந்துரைக்கப்படவில்லை.
  • பாலாடைக்கட்டிகள், பச்சை பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் போன்ற பதப்படுத்தப்படாத  பால் பொருட்கள்
  • அல்ஃபா அல்ஃபா, முளைக்கட்டிய பீன்ஸ் போன்ற முளைக்கட்டியவை

நீண்ட கால ஊட்டச்சத்து மேலாண்மை

நீண்ட கால ஊட்டச்சத்து மேலாண்மை என்பது இதய ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை உள்ளடக்கியது. பெரும்பாலும் மருந்துகளின் பக்க விளைவுகள் சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு உணரப்படலாம், இது பொதுவாக அதிக எடை அதிகரிப்பு அல்லது அதிக கொழுப்பு அளவு, இது மேலும் இதய நோய்க்கு வழிவகுக்கும். உங்கள் மருத்துவர் உங்கள் உடல்நிலையின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பார், மேலும் இரத்த அழுத்த அளவு மற்றும் எடையைக் கண்காணிக்கும்படி உங்களிடம் கேட்கப்படலாம்.

நீரேற்றத்துடன் இருப்பதைத் தவிர, இதய ஆரோக்கியமான உணவில் குறைந்த கொழுப்புள்ள பால், மெலிந்த இறைச்சி மற்றும் மீன், நார்ச்சத்து, ஏராளமான காய்கறிகள் மற்றும் குறைந்த உப்பு ஆகியவை அடங்கும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சமைப்பது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு உணவுப் பாதுகாப்பு

உணவுப் பாதுகாப்பு அவசியம் மற்றும் மிகவும் முக்கியமானது. உணவை சரியாகக் கையாளவில்லை என்றால் அது கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். உணவுப் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:

  • உணவைக் கையாளுவதற்கு முன், பச்சை இறைச்சி அல்லது கோழி அல்லது மீனைத் தொட்ட பிறகு, செல்லப்பிராணிகளைக் கையாண்ட பிறகு கைகளை சரியாகக் கழுவவும்.
  • பச்சை மற்றும் சமைத்த உணவை தனித்தனியாக சேமிக்கவும்.
  • உணவை நன்கு சமைக்கவும்
  • உணவுப் பொருட்கள், காலாவதி தேதிகள் போன்றவற்றின் லேபிள்களைச் சரிபார்க்கவும்.
  • நெருப்பில் சுட்ட இறைச்சி, சுஷி, மீன், பதப்படுத்தப்படாத பால் பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்கவும்.
  • வெளியே சாப்பிடும் போது கவனமாக இருக்கவும்

முடிவுரை

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் இயல்பான  உணவை எடுத்துக்கொள்ள ஆயத்தப்படுவீர்கள். சிலர் பசியின்மை அதிகரிப்பதை உணரலாம், இது அதிகப்படியான உணவு மற்றும் அதிக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். புதிய சிறுநீரகத்திற்கு டயாலிசிஸ் தேவைப்படாமல் இருக்கலாம், ஆனால் சேதமடைவதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. எனவே சமச்சீர் உணவு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திய சிக்கல்களின் வாய்ப்புகளை குறைக்கும் மற்றும் கட்டுப்படுத்தும். உங்கள் மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணர் உங்கள் உடல்நிலையைப் பொறுத்து, உங்கள் உணவுத் திட்டத்தில் அவ்வப்போது மாற்றங்களைச் செய்வார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் நோக்கம் ஒட்டுமொத்த நிலையான ஆரோக்கியத்தையும் உடல்நலத்தையும் மேம்படுத்துவதாகும்.

Avatar
Verified By Apollo General Physician

Our expert general medicine specialists verify the clinical accuracy of the content to deliver the most trusted source of information makine management of health an empowering experience

Quick Appointment
Most Popular

உலக கருப்பை புற்றுநோய் தினம்

ஒற்றைத் தலைவலி மற்றும் பக்கவாதம் – இதற்கிடையே ஏதேனும் இணைப்பு உள்ளதா?

இதய மாற்று சிகிச்சை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

Quick Book

Request A Call Back

X