முகப்புஆரோக்கியம் A-Zசெப்சிஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

செப்சிஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

செப்சிஸ் என்பது நோயாளியின் சொந்த நோயெதிர்ப்பு மண்டலத்தால் உடல் சேதமடையும் போது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுக்கு பதிலளிக்கும் ஒரு அபாயகரமான மருத்துவ நிலை ஆகும். செப்சிஸ் என்பது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் காணப்படும் அதிகப்படியான எதிர்வினை என்பதை மக்கள் அறிவார்கள். இந்த அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி, பல உறுப்புகளின் திசுக்களைத் தாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கிவிடும்.

செப்சிஸ் பற்றிய கூடுதல் விவரங்கள்

எந்தவொரு உடல் பாகத்தையும் பாதிக்கும் ஒரு தொற்றுக்கு உங்கள் உடல் இயற்கைக்கு மாறான வழியில் பதிலளித்தாள், அது செப்சிஸ்க்கான அர்த்தம் என நீங்கள் கருதலாம். பொதுவாக, தோல், நுரையீரல் அல்லது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகள் இந்த மருத்துவ நிலைக்கு காரணமாக இருக்கலாம். இந்த நோய் பரவக்கூடியது அல்ல, இருந்தாலும் ஒரு தொற்று நோயானது அதைத் தூண்டலாம். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறும். 

செப்சிஸின் மிக முக்கிய நிலைகள் யாவை?

செப்சிஸ் என்பது நிலையை பொறுத்து மாறக்கூடிய ஒன்றாகும்.

1. நோய்த்தொற்றின் மிக முக்கிய அறிகுறிகளாக அதிக காய்ச்சல் மற்றும் விரைவான சுவாசம் இருக்கும். இருப்பினும், அடுத்த கட்டங்களுக்குச் செல்வதற்கு முன், இது மிக விரைவாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

2. தீவிர செப்சிஸ் என்பது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் சரியாகச் செயல்படத் தவறிய நிலையாகும். பொதுவாக, இரத்தம், சிறுநீரகம், நுரையீரல் அல்லது அடிவயிற்றில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் நோயாளியின் உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தீவிரமான நிலையைத் தூண்டும்.

3. செப்டிக் ஷாக் என்பது ஒரு அபாயகரமான கட்டமாகும், இதில் நோயாளிகள் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறார்கள், மேலும் இரத்த அழுத்த அளவில் அதிகப்படியான வீழ்ச்சியும் ஏற்படுகிறது.

செப்சிஸுடன் தொடர்புடைய அறிகுறிகள் யாவை?

செப்சிஸின் ஆரம்ப நிலை பின்வரும் சில அறிகுறிகளின் முன்னிலையில் கண்டறியப்படலாம்.

  • அதிக காய்ச்சலின் போது உடல் வெப்பநிலை 101 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் உயரும் அல்லது 96.8 டிகிரி பாரன்ஹீட்டை விட உடல் அதிக குளிர்ச்சியாகிறது.
  • நோயாளியின் சுவாசம் மிக வேகமாக இருக்கும், சுவாச விகிதம் 20 சுவாசங்கள் / 1 நிமிடத்திற்கு மேல் அளவிடப்படுகிறது.
  • இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 90 துடிப்புகளுக்கு மேல் அதிகரிக்கிறது, இதனால் படபடப்பு ஏற்படுகிறது.
  • ஒரு மருத்துவர் உடலின் எந்த உறுப்புகளில் தொற்றுநோய் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறார்.

தீவிர செப்சிஸ் நோயின் போது, பல உறுப்புகள் வேலை செய்வதை நிறுத்துவதால், நோயாளிகள் பல அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர்.

  • சிறுநீர் கழிக்கும் அதிர்வெண்ணைக் குறைத்தல்
  • மூச்சுத்திணறல்
  • மன நிலையில் திடீர் மாற்றங்கள்
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் தோல் மறைதல்
  • இதயத் துடிப்பில் ஒழுங்கற்ற தன்மை
  • பிளேட்லெட் எண்ணிக்கையில் குறைவு
  • ஒட்டுமொத்தமாக உடல்  மிகவும் பலவீனமடைதல்
  • விரும்பத்தகாத குளிர்வது போன்ற உணர்வு
  • சுயநினைவு இழப்பு

இந்த அறிகுறிகள் அனைத்தும் செப்டிக் ஷாக் நிகழ்வுகளிலும் காணப்படுகின்றன, மேலும் இரத்த அழுத்தம் குறைவதால் அபாயகரமான நிகழ்வு ஏற்படுகிறது.

எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்?

பொதுவாக, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் செப்சிஸுக்கு வழிவகுக்கும் தொற்றுநோய்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அறுவைசிகிச்சைக்குப் பிறகு செப்சிஸின் ஆரம்ப நிலைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும், ஏனெனில் நோயாளிக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய விளைவுகளில் இருந்து மீண்டு வரும்போது இதுபோன்ற அறிகுறிகள் உருவாகலாம்.

அப்போலோ மருத்துவமனையில் சந்திப்பைக் கோருங்கள்

சந்திப்பை முன்பதிவு செய்ய 1860-500-1066 ஐ அழைக்கவும்

செப்சிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

பல்வேறு வகையான நோய்த்தொற்றுகள் படிப்படியாக செப்சிஸ் நிலைக்கு மாற முக்கிய காரணங்கள் ஆகும். மனித உடலை ஆக்கிரமிக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சைகளால் பின்வரும் தொற்றுகள் ஏற்படலாம்.

  • இரத்தத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்று பாக்டீரிமியா என்று  அழைக்கப்படும்
  • எலும்புகளில் ஏற்படும் தொற்று ஆஸ்டியோமைலிடிஸ் என்று அழைக்கப்படுகிறது
  • செரிமான மண்டலம், பித்தப்பை, கல்லீரல், வயிற்று துவாரம் மற்றும் பிற்சேர்க்கையின் பல்வேறு பகுதிகளில் தொற்று ஏற்படுவது
  • நுரையீரலில் தொற்று ஏற்படும் போது நிமோனியா உருவாகிறது
  • சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகள், அடிக்கடி வடிகுழாய்களால் ஏற்படுகின்றன
  • தோலில் ஏற்படும் காயங்கள், செல்லுலிடிஸ் மற்றும் பிற வகையான தோல் அழற்சிகள் பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது
  • மூளையில் தொற்று என்பது, மூளையுறை எனப்படும் அதன் உறைகள் மற்றும் முதுகுத் தண்டு

செப்சிஸ் தொடர்பான ஆபத்து காரணிகள் யாவை?

இந்த கடுமையான மருத்துவ நிலையானது அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ளும் பின்வரும் நபர்களுக்கு ஏற்படும் எந்தவொரு தொற்றும் செப்சிஸாக மாறலாம்.

  • 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்
  • நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சனைகள், சுவாசக் கோளாறுகள், கல்லீரல் ஈரல் அழற்சி அல்லது புற்றுநோய் உள்ள நோயாளிகள்
  • மிகவும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள்
  • தீக்காயங்கள் அல்லது கடுமையான காயங்களில் இருந்து மீண்டு வந்த  நோயாளிகள்
  • கர்ப்பிணி பெண்கள்
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள்
  • IV அல்லது சிறுநீர் வடிகுழாய்கள் அல்லது சுவாசக் குழாய்களைப் பயன்படுத்தும் நோயாளிகள்

செப்சிஸுக்கு என்னென்ன சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன?

செப்சிஸிற்கான சிகிச்சையானது அதன் அடிப்படை காரணத்தை அடிப்படையாகக் கொண்டது. செப்சிஸிற்க்கான காரணம் மற்றும் தீவிரத்தின் அடிப்படை நிலையை பொறுத்து மருத்துவர் வெவ்வேறு சிகிச்சை வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவார்.

  • IV திரவங்கள் மற்றும் ஆக்ஸிஜன் – நோயாளியின் அனைத்து உடல் உறுப்புகளிலும் இயல்பான இரத்த ஓட்டத்தை பராமரிக்க வேண்டும். நோயாளியின் சுவாசத்தை எளிதாக்க மருத்துவர்கள் ஆக்ஸிஜனையும் வழங்குகிறார்கள்.
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள் – நுண்ணுயிர் நோய்த்தொற்றுகளுக்கு, நரம்பு வழியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்குவதன் மூலம் சிகிச்சையளிக்கப்படலாம்.
  • Vasopressor மருந்துகள் – இந்த வகையான மருந்துகள் நோயாளியின் இரத்த அழுத்தத்தை ஆபத்தான நிலைக்குக் குறைக்கும் போது அதிகரிக்கிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்க இரத்த நாளங்களை சுருக்குகிறது.
  • மற்ற நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் – வீக்கத்தைக் குறைப்பதற்கும், அதிகப்படியான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் குறைப்பதற்கும் கார்டிகோஸ்டீராய்டுகளை குறைந்த அளவுகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். அவர்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் மற்றும் தற்காலிக நிவாரணத்திற்காக சில வலி நிவாரணிகளை வழங்கலாம்.
  • ஆதரவு இயந்திரங்கள் – ஆபத்தான நிலையில், நோயாளிகளுக்கு சுவாசத்தை ஆதரிக்க ஒரு சுவாச இயந்திரம் (BIpap இயந்திரங்கள்/வென்டிலேட்டர்கள் போன்றவை) மற்றும் ஒரு டயாலிசிஸ் இயந்திரம் அல்லது நச்சுகளை வெளியேற்றவும், செப்சிஸ் தொடர்பான சிக்கல்களைக் குறைக்கவும் தொடர்ச்சியான சிறுநீரக மாற்று இயந்திரம் தேவைப்படலாம்.
  • அறுவைசிகிச்சை – சில சந்தர்ப்பங்களில், நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய குடலிறக்கம் அல்லது புண்களை குணப்படுத்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

செப்சிஸ் ஏற்படுவதன் காரணமாக என்னென்ன சிக்கல்கள் உருவாகும் ?

  • செப்சிஸின் பிற்பகுதியில், நோயாளிகள் சிறுநீரகம், நுரையீரல், இதயம் மற்றும் மூளை ஆகியவற்றில் கடுமையான பாதிப்புகளால் பாதிக்கப்படுகின்றனர்.
  • மூட்டுகள், விரல்கள் மற்றும் கால்விரல்களில் இரத்தம் உறைதல் மற்றும் தீவிர நிகழ்வுகளில் இறந்த திசுக்களால் பாதிக்கப்பட்ட பாகங்கள் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.
  • சில சந்தர்ப்பங்களில், செப்டிக் ஷாக் நிலையில் தொற்றுகள் மேலும் பரவுவது மரணத்திற்கு வழிவகுக்கும்.

சில தடுப்பு உதவிக்குறிப்புகள் யாவை?

செப்சிஸ் ஆபத்தில் இருந்து விலகி இருக்க, நீங்கள் தொற்றுநோய்களைத் தடுக்க வேண்டும். சில பயனுள்ள வழிமுறைகள் அனைத்து வகையான தொற்றுநோய்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றும்.

  • நிமோனியா, காய்ச்சல், சின்னம்மை, மற்றும் பிற நோய்களைத் தடுக்க தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவுதல், தினமும் குளித்தல் மற்றும் காயங்களை சுத்தமாக மூடி வைப்பதன் மூலம் சரியான சுகாதாரத்தை பராமரிக்கவும்.
  • உங்கள் நோய்த்தொற்று மோசமடைவதற்கு முன்பு உடனடியாக உங்கள் மருத்துவரை அழைக்கவும்
  • கண்ணாடி அல்லது வேறு ஏதேனும் பொருட்களால் சிறியதாக வெட்டுப்பட்டாலும், வெளிப்புற காயங்களுக்கான சிகிச்சைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்
  • ஏதேனும் சிறிய காயம் ஏற்பட்டால், காயத்தை சுத்தம் செய்வதற்கும், சரிசெய்வதற்கும் முறையான கிருமி நாசினிகளை பயன்படுத்தவும்
  • மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் எடுத்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் இது ஆண்டிபயாடிக் எதிர்ப்புக்கு வழிவகுக்கும் மற்றும் இதனால் கடுமையான தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பது கடினம்.

முடிவுரை

செப்சிஸ் என்பது ஒரு அவசர நிலையாகும், இதில் நோயாளி ஆபத்திலிருந்து வெளியேறும் வரை 24 மணிநேரமும் மருத்துவ கவனிப்பு தேவைப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

செப்சிஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வருமா?

செப்சிஸால் குணப்படுத்தப்பட்ட நோயாளிகள், உடலின் ஏதாவதொரு பகுதியில் மற்றொரு தொற்றுநோயால் பாதிக்கப்படலாம், இது மீண்டும் செப்சிஸாக மாறலாம்.

ஒரு நோயாளிக்கு செப்சிஸின் அறிகுறிகளுகள் காணப்பட்டால் என்ன செய்வது?

ஏதேனும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை அழைக்க வேண்டும்.

குழந்தைகளில் காணப்படும் செப்சிஸின் அறிகுறிகள் பெரியவர்களிடமிருந்து வேறுபடுகின்றனவா?

அதிக காய்ச்சல் மற்றும் விரைவான சுவாசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, வாந்தி, சொறி மற்றும் வலிப்பு ஆகியவற்றுடன், செப்சிஸ் இருக்கலாம். இந்த அறிகுறிகள் பெரியவர்களைப் போலவே இருக்கும், ஆனால் அவர்களின் நிலைமைகள் வயதுவந்த நோயாளிகளை விட வேகமாக மோசமடையக்கூடும்.

Avatar
Verified By Apollo General Physician

Our expert general medicine specialists verify the clinical accuracy of the content to deliver the most trusted source of information makine management of health an empowering experience

Quick Appointment
Most Popular

உலக கருப்பை புற்றுநோய் தினம்

ஒற்றைத் தலைவலி மற்றும் பக்கவாதம் – இதற்கிடையே ஏதேனும் இணைப்பு உள்ளதா?

இதய மாற்று சிகிச்சை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

Quick Book

Request A Call Back

X